4 டிச., 2011

தன்னோவியம்

என் அனுமதியின்றி
என்னை வரைகின்ற
ஏதோ ஓர்  தூரிகையைப்
பின்னிழுக்கும் முயற்சியில்
தோற்றுச்
சலிக்கின்றன
விரல்கள்.


நகர மறுத்துத்
தேங்கிய தூரிகையின்
உலராதத் தீற்றல்கள்
பின்
உலர்ந்து
வடுக்கள் ஆகின்றன.


அகல மறுக்கும் வடுக்களை
அழிக்கும் முயற்சியில்
தேய்ந்து அழிகின்றன
விரல் ரேகைகள்.

 
போராடி ஓய்ந்த
என்  விரல்களை
ஏமாற்றி நழுவும்
தூரிகை கிறுக்கிய
நீழ் கோட்டின் வழியே
வழிந்து மறைகின்றது
என்
தன்னோவியம்.