12 அக்., 2023

உறக்கம்

 எனது 

உள்ளங்கையில்

உனது உள்ளங்கை

ஈர இலையாய் 

பொதிந்து கிடக்கும்.

உனது கடலின்

உறக்க அலையாய்

எனது பிடிக்குள்

துடிக்கும் உன் நாடி. 


எனது உடல் 

விரல்களாய் வளர்ந்து

உனது உடலில்

கலக்கும் 

அப்பொழுது. 


அலையும் இலையாய்

மிதக்கும் இம் மனது.

ஆழம் அறியா

ஆழி உன் மனது. 

28 ஜூன், 2022

ஈக்கள்

எழுதாத கடிதங்கள்

மனவறையில் 

மக்கிக் கொண்டிருக்கின்றன. 


தொடு திரையில் 

பாவாது

மிதந்து போய்ச் சேர்கின்றன

ஈக்கள். 

24 செப்., 2021

எனக்கும் 

என் தொடு திரைக்கும் 

இடையே

பட்டாம்பூச்சி ஒன்று

கடந்து போனது. 


வர்ணம் பாரித்த

விரல் நுனியைத்தான்

வருடிக் கொண்டிருக்கிறேன்

இப்போது. 

30 ஆக., 2021

உறக்கம்

 இரவின் உறக்கம்

கரைந்து

ஒற்றைத் துளியாய்ச்

சொட்டியதை

பரிதி குடித்துப் போனது. 

வறியப் புல் நுனி நான்.