12 அக்., 2023

உறக்கம்

 எனது 

உள்ளங்கையில்

உனது உள்ளங்கை

ஈர இலையாய் 

பொதிந்து கிடக்கும்.

உனது கடலின்

உறக்க அலையாய்

எனது பிடிக்குள்

துடிக்கும் உன் நாடி. 


எனது உடல் 

விரல்களாய் வளர்ந்து

உனது உடலில்

கலக்கும் 

அப்பொழுது. 


அலையும் இலையாய்

மிதக்கும் இம் மனது.

ஆழம் அறியா

ஆழி உன் மனது.