வருட வருடப்
பெருகிக் கரையும்
வழலை நுரை
போன்றவை
பிள்ளைக் காதல்
நினைவுகள்.
பாதங்களை மட்டுமே
பார்த்த படி
பயணிப்பதுதான்
இந்தப்
பயணம்.
தனது
பாதங்களே
இப்பயணத்தின் நீளம்
பாதங்களே
இப்பயணத்தின்
பாதை.
அடையும் இடத்தை
நம் பாதங்கள்
காட்டும்போது
பாதை மீது
எதற்கிந்தக்
கவனம்?