29 ஜூலை, 2024

அறை

 பார்வைகள் பட்டு

அழுக்கேறும் 

அறைச்சுவர்கள்.


சன்னல் வழி நுழைந்து

வந்த வழியே

வெளியேறும் 

காற்று.


விரல் தழுவ

உறங்கி 

விழிக்காதப் 

புத்தகங்கள்.


கிடந்த போதெல்லாம்

ஒன்றாகி உடலோடு

விம்மித் தணியும் 

தரை. 


உருகும் காலம்

கரைந்து கெட்டித்த

கவிதைக் குறிப்பேடு.


தனிமைக்குத் துணையாய்

தனிமையை யாசிக்கும் 

மனம்.


இறக்க

இயலாமல்

இந்த அறையைத்தான்

இன்னும்

தூக்கித்

திரிகிறேன். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக