வாழ்நாளின் சுவாசங்களெல்லாம்
ஒற்றைத் துளியாய் இறுகி
என் மேல் சொட்டும்
அக் கணப் பொழுது
காட்சிப் புலமைனைத்தும்
பார்வைக் குவியத்தில் திரண்டு
ஒற்றைக் கூர்கதிராய்
தாக்கும் அக் குறு நொடி
பேரலையாகும் உயிர்ப்பின் மின்னலைகள்
நரம்பு ஊடகங்களை
அறுத்துத் தெறிக்கும்
உணர்வுப் பிரளயத்தின் பின்ன நொடி
எனத் தன் மரணத்தின் ஒப்பற்ற வலியை
நினைவூட்டி நிகழ்ந்து விடுகின்றன
கையறு நிலையில்
கண்முன் மரணங்கள்.
ஒற்றைத் துளியாய் இறுகி
என் மேல் சொட்டும்
அக் கணப் பொழுது
காட்சிப் புலமைனைத்தும்
பார்வைக் குவியத்தில் திரண்டு
ஒற்றைக் கூர்கதிராய்
தாக்கும் அக் குறு நொடி
பேரலையாகும் உயிர்ப்பின் மின்னலைகள்
நரம்பு ஊடகங்களை
அறுத்துத் தெறிக்கும்
உணர்வுப் பிரளயத்தின் பின்ன நொடி
எனத் தன் மரணத்தின் ஒப்பற்ற வலியை
நினைவூட்டி நிகழ்ந்து விடுகின்றன
கையறு நிலையில்
கண்முன் மரணங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக