உடல் சுற்றிய போர்வையாய்
குளிரீரம் படர,
ஈரம் உள்நுழைந்து
மாயக் கட்டுகளை
அவிழ்த்து விட,
முளை ஒன்று
வெளி ஓட்டை உள்ளிருந்து
செல்லமாய் முட்டுகிற
குறுகுறுப்பை ரசித்திருக்கும்
ஈர மண் புதைத்த விதையாக
உணர்கிறேன் என்னை
மழைக்கால இரவுகளில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக